குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மார் விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. மியன்மாரின் ராகினே மாநிலத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகளை தடுக்க அந்நாட்டு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்கள் மியன்மாரின் பொருளாதாரத்தையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளது. இதேவேளை, பங்களாதேஸில் சரணடைந்துள்ள ரோஹினிய முஸ்லிம்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு ஆறு மாத காலத்திற்கு சுமார் 200 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
ராகினே மாநிலத்திலும் நெருக்கடி நிலைமைகள் ஏற்படக்கூடும் என தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.