293
ஜம்மு-காஷ்மீரில் பண்டி போராவின் சிம்கோல் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. பண்டி போராவின் சிம்கோல் பகுதியை மையமாக வைத்து நில நடுக்கம் உருவானது. லேசான நிலநடுக்கம் என்பதால் சேதம் இல்லை. கட்டிடங்கள், வீடுகள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் கட்டிடங்களை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love

