குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணை நடத்த உள்ளது. முன்னாள் இலங்கை அணியின் வீரர் பிரமோதய விக்ரமசிங்கவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் மோசடிகளுக்கு எதிரான பிரிவின் அதிகாரிகள் அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர். இலங்கை அணியின் அண்மைய தோல்விகள் தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக இலங்கை அணியின் சில வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment