இலங்கையில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுவதாகவும் அவற்றில் 15 சதவீதமானோர் மார்பக புற்றுநோயாளிகள் எனவும் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
புதிதாக நாளுக்கு 6 -7 பேர் வரை மார்பக புற்று நோயாளிகள் புதிதாக இனங்காணப்படுகின்றனர் எனவும் 45 முதல் 60 வயது வரையான பெண்களே பெரும்பாலும் மார்பக பற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுமள்ளது.
புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் இனங்காண்டுவிட்டால் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் எனவும் பெரும்பாலோர் காலம் தாமதமாகி வருவதால் குணப்படுத்துவது கடினமாகி வீவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு வைத்தியசாலைகளில் 800 புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன எனவும் அதன் மூலம் மக்கள் தங்களுக்கு எழுகின்ற சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று தேசிய புற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆண்டுதோறும் 2 ஆயிரத்து 500 மார்பக புற்றுநோயாளிகள் உட்பட சுமார் 17 ஆயிரம் அனைத்து வகையிலான புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுகின்ற அதேவேளை, 13 ஆயிரம் புற்று நோயாளிகள் மரணமடைகின்றார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை புற்றுநோய் வராமல் ஆரம்பத்திலே தடுப்பு மருந்து மூலம் தடுக்கின்ற வகையிலே, குறிப்பாக பாடசாலைகளில் 6ஆம் வகுப்பு மாணவியருக்கு HPV தடுப்பூசி போடப்படுகின்றது என தேசிய புற்றுநோய் தடுப்புப் பிரிவின் இயக்குநர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளர்.
புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக அண்மைக்காலமாக சிறுவர்கள் மத்தியில் அதனால் வரக்கூடிய புற்றுநோய் அதிகரித்ப்பு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.