இலங்கை

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ பயணம்  மேற்கொண்ட ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேன   தனது  பயணத்தினை    நிறைவுசெய்து இன்று   முற்பகல் நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வில் பங்குபற்றிய மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன்,  பல நாட்டுத் தலைவர்கள் , ஐ.நா மனித உரிமைப் பேரவையின்  ஆளுனர் மற்றும்  ஐ.நாவின் செயலாளர்  ஆகியோரைச் சந்தித்துள்ளதுடன்  நாடு என்ற வகையில் பின்பற்றப்படும் கொள்கைகள் குறித்து  ஜனாதிபதி உலக நாடுகளின் தலைவர்களுக்கு   எடுத்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply