Home உலகம்அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய வைத்திய தம்பதியர் 1,300 கோடி நன்கொடை அளித்தனர்:-

அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய வைத்திய தம்பதியர் 1,300 கோடி நன்கொடை அளித்தனர்:-

by admin

அமெரிக்காவின் மியாமி அருகே அமைந்துள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு, இந்திய வைத்திய தம்பதியர் 1,300 கோடி ரூபா நன்கொடை அளித்துள்ளனர்.

இந்திய வம்சாவழி வைத்தியரான கிரண் பட்டேல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், டாம்பா துறைமுக நகரில், ‘Freedomhealth’ என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருகிறார். இதய நோய் மருத்துவ நிபுணராகவும் தொழில் செய்துவரும் இவரது மனைவி, பல்லவி பட்டேல் குழந்தைகள் நல மருத்துவ நிபுணராக பணிபுரிகிறார்.

இவர்கள் நடத்தி வருகிற பட்டேல் குடும்ப அறக்கட்டளையின் சார்பில், மியாமி அருகே அமைந்துள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 200 மில்லியன் டொலர் ( இந்திய ரூபாயில் சுமார் ரூ.1,300 கோடி) நன்கொடை அளித்துள்ளனர்.

இதில் 50 மில்லியன் டொலரை பணமாகவும், மிகுதி 150 மில்லியன் டொலரை 3¼ லட்சம் சதுர அடி நிலமாகவும் வழங்கி உள்ளனர். இந்த நன்கொடையை பயன்படுத்தி அந்த பல்கலைக்கழகம், ஒரு பிராந்திய வளாகத்தை ஆரம்பிக்க உள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் இருந்து செல்லும் வைத்தியர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றதாகும் என வைத்தியர் கிரண் பட்டேல் கூறியுள்ளார்.
இதேவேளை புளோரிடா மாகாணத்தில் உலகத்தரம் வாய்ந்த சுகாதாரத்தை உருவாக்கவும் இவர்களது நன்கொடை பக்கபலமாக அமையும். இந்தப் பல்கலைக்கழகம், ஆண்டுக்கு 250 வைத்தியர்களை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து பல்லவி பட்டேல் கூறும்போது, “நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடனான எங்களது கூட்டு ஆயிரக்கணக்கான டாக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மையாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More