குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை முடிந்தளவு காலம் தாழ்த்தி வருவதாக கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
30 வீத பெண்கள் பிரதிநிதித்துவம் என்ற உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டம் சிவில் அமைப்புக்களையும், பெண்கள் அமைப்புக்களையும் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடே ஏமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
30 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கில் புதிய சட்டத் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக 30 வீதமான பெண்களை உள்ளடக்கி வேட்பு மனுத் தாக்கல் செய்யாத கட்சிகளின் வேட்பு மனுக்களை நிராகரிப்பதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் மேலும் மேலும் தேர்தல்களை நடத்துவதற்கு காலம் தாழ்த்தும் நோக்கில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.