Home உலகம்பிரித்தானியாவில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார்

பிரித்தானியாவில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் பிரிஸ்டலில் எம்ஐ வீதியில் ஆயுத மேந்திய காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார். வாகனமொன்றின் மீது காவல்துறையினர்  துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதை பார்த்தாக  ஒருவர்  தெரிவித்துள்ளார்.

வாகனமொன்றின் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் நபர் ஓருவரை   வெளியே இழுத்ததை பார்த்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  காவல்துறையினர் ஐந்து ஆறு தடவை துப்பாக்கிபிரயோகம் செய்தனர் எனவும் அந்த வாகனத்தை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர்  எனவும் பின்னர் நபரை வெளியே இழுத்து எடுத்தனர் எனவும்  அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து சுயாதீன காவல்துறை ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட சம்பவம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More