தமிழகம் டெங்கு காய்ச்சல் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. அண்மைய நாட்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் 69 பேர் பலியாகி உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் டெங்குக்காய்ச்சல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் மட்டும் சுமார் 200 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட கள்ளக்குறிச்சி பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் சரிவர மேற்கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெங்குகாய்ச்சல் பரவிவருவது தீவிரமடைந்துள்ளதாக கூறப்படடும் நிலையில், இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை தடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் வலியுறுப்பட்டுள்ளது.