Home உலகம்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பங்களாதேசுக்கு புகலிடம் கோரி சென்ற 60 ரோகிங்யா மக்கள் உயிரிழப்பு

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பங்களாதேசுக்கு புகலிடம் கோரி சென்ற 60 ரோகிங்யா மக்கள் உயிரிழப்பு

by admin


மியான்மாரிலிருந்து பங்களாதேசுக்கு   புகலிடம் கோரி சென்றவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரோகிங்யா முஸ்லிம் மக்கள்  60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மாரில் ஏற்பட்டுள்ள ராணுவ நடவடிக்கைகள் காரணமாக மக்கள்  பங்களாதேஸை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் மற்றும் ஆற்றின் வழியாக படகில் செல்லும் நிலையில்  பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், பங்களாதேசுக்கு புகலிடம் கோரி  சென்ற ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் சென்ற இரு படகுகள் நேற்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் எனவும்  அவர்களில் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்    காணாமல்போன 40-க்கும் அதிகமான உடல்களை மீட்கும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More