153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியின் இடைக்கால முகாமையாளராக மோ மார்லி (Mo Marley) நியமிக்கப்பட்டுள்ளார். பணி நீக்கப்பட்ட மார்க் சாம்சனுக்கு பதிலீடாக மோ மார்லி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவியும், 19 வயதுக்கு கீழ்பட்ட மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளருமான மார்லி, தேசிய அணியின் முகாமையாளராக கடமையாற்ற உள்ளார்.
மூன்று போட்டிகளுக்கு மே மார்லி, முகாமையாளராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது. மார்லி, எவர்டன் கழகத்தின் மகளிர் அணியின் பயி;ற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
Spread the love