குவைத்தில் தூக்குத்தண்டனையை எதிர் நோக்கியிருந்த 15 இந்தியர்களின் தண்டனையை குவைத் மன்னர் ஜாபர் அல் அஹ்மத், ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார். குவைத்துக்கு வேலைக்ககாக இந்தியாவைச் சேர்ந்த சிலர், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அங்கு சிறையில் உள்ளனர். இந்தநிலையில் இந்திய மத்திய அரசு, குவைத் நாட்டிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய 15 கைதிகளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து மன்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அந்நாட்டு மன்னருக்கு இந்தி வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் 119 இந்தியர்களின் தண்டனையை குறைப்பதாகவும் குவைத் அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ள சுஷ்மா சிறையில் உள்ள அந்த கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையை இந்திய தூதரகம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.