சிரியாவின் வடமேற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் இத்லிப் மாகாணம் தீவிரவாத கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள அமனாஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை சிரியா அரசபடை மேற்கொண்டதா அல்லது ரஸ்ய படையினர் மேற்கொண்டனரா என்பது குறித்து தெரியவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சமாதான வலையம் ஒன்றை உருவாக்கும் ரஸ்ய ஜனாதிபதி மற்றும் துருக்கி பிரதமர் கடந்த வியாழக்கிழமை ஒப்புக்கொண்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்த தாக்குதலினால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.