குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்னிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்ள சர்வதேச சமூகத்தின் உதவி தேவை என கட்டாலன் ஜனாதிபதி கார்ல்ஸ் பூகிடமொன்ற் ( Carles Puigdemont ) தெரிவித்துள்ளார். ஸ்பெய்னுடன் நிலவி வரும் முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்க சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரப் பிரகடனம் மேற்கொண்டு அண்iமையில் கட்டாலனில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 900 பேர் வரையில் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெய்னிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்வது தொடர்பிலான சர்வதேச தலையீட்டை, ஐரோப்பிய ஆணைக்குழு ஊக்கப்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.
Spread the love
Add Comment