164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வங்குரோத்து அடைந்த அரசியலுக்கு சிங்கள பௌத்த அதிகாரத்தை வழங்கக் கூடாது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். இம்புல்பே பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த பிக்குகளுக்கு அவதூறு ஏற்படும் வகையில் சிலர் காவி உடை அணிந்து மோசமாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தலை இலக்கு வைத்து தாம் செயற்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தமது அரசாங்கத்தில் இன, மத மற்றும் மொழி பேதங்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.
Spread the love