Home இந்தியாதமிழக புதிய ஆளுனர் சென்னையை வந்தடைந்தார்.

தமிழக புதிய ஆளுனர் சென்னையை வந்தடைந்தார்.

by admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னையை வந்தடைந்துள்ளார். அவரை சென்னை விமான நிலையத்தில் சபாநாயகர் தனபால், முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மகாராஷ்டிர மாநில ஆளனரான    வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில்; தமிழகத்துக்கு முழு நேர ஆளுனரை  நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்தநிலையில் அசாம் மாநில ஆளனராக செயற்பட்டு வந்த   பன்வாரிலால் புரோஹித்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழகத்தின் புதிய ஆளுனராக கடந்த 30ம்திகதி நியமித்திருந்தார்.  இதற்கயை நாளை ஆளுனராக பதவியேற்கவுள்ள பன்வாரிலால் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு பன்வாரிலால் புரோகித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More