குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாத சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய புகைப்பட தகவல்திரட்டு ஓன்றை அவுஸ்திரேலிய காவல்துறையினர் உருவாக்கவுள்ளனர் என பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார். அதிகாரிகளிடம் தற்போதுள்ள தரவுகளை அடிப்படையாக வைத்தே இந்த தகவல்திரட்டை உருவாக்கவுள்ளதாக தெரிவித்தள்ள பிரதமர் பயங்கரவாத சந்கேதநபர்களை ஆபத்தானவர்களை துரிதமாக இனம்காண்பதற்காகவே இந்த நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஓருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அல்லது தேடப்படும் நபர் ஓருவரின் புகைப்படத்தை ஓப்பிட்டுபார்ப்பதற்கு ஓரு வாரமாகின்றது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதனை மாற்றியமைக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.