197
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2022ம் ஆண்டில் கட்டாரில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடாத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டாரில் நிலவி வரும் அரசியல் பதற்ற நிலைமை காரணமாக சில வேளைகளில் போட்டிகளை நடத்த முடியாத நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கட்டாருக்கு எதிரான அழுத்தங்கள் உலகக் கிண்ண ஆயத்தப்பணிகளை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரியளவிலான பொருட் செலவில் மைதானங்கள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love