டீசல் விலை உயர்வு, GST, சுங்க கட்டண கொள்கை போன்றவைக்கு எதிர்ப்பு தெரிவித்து பார ஊர்திகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் இந்தியா முழுவதும் 70 முதல் 80 சதவீத வர்த்தகம் முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., சுங்க கட்டண கொள்கை போன்றவைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து கொங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் 2 நாள் பார ஊர்திகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்றும், இன்றும் இந்த வேலை நிறுத்தம் தொடர்கிறது.
இந்த வேலை நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் பார ஊர்திப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. மும்பையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பார ஊர்திகள் ஓட்டுணர்கள், மன்குர்ட் சோதனைச்சாவடியில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த முதல் நாள் போராட்டம் முழு வெற்றியடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.