குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மார் ரோஹினிய முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 11000த்திற்கும் மேற்பட்ட ரோஹினிய முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர்கள் பங்களாதேஸில் நேற்றைய தினம் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டாயிரம் பேர் மியன்மாரிலிருந்து பங்களாதேஸ் நோக்கி நகர்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
கொலைகள் கிராமங்கள் அழிக்கப்பட்ட சம்பவங்களினால் புகலிடக் கோரிக்கையாளர்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரி வரும் ரோஹினிய முஸ்லிம்கள் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.