Home இலங்கைபுகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

by admin

புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களால்  மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம்  கைவிடப்படுவதாக  புகையிரத தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேனவினது ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவுக்கும் புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று   மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையிலான  எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை  நியமித்து குறித்த பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இன்று காலை போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்தே இந்த சந்திப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More