குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்கா, யுனெஸ்கோ என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார நிறுவனத்திலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. யுனெஸ்கோ இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியே இவ்வாறு, அமெரிக்கா உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொண்டுள்ளது. யுனெஸ்கோ மறுசீரமைக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உறுப்புரிமையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டமை வருத்தமளிப்பதாக யுனெஸ்கோவின் தலைவி இரினா போகோவா ( Irina Bokova ) தெரிவித்துள்ளார். உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தாலும் எதிர்வரும் 2018ம் ஆண்டு வரையில் அமெரிக்கா முழு உறுப்பு நாடாக செயற்படும் என தெரிவிக்கப்படுகிறது.