Home உலகம்வடகொரியா தனது அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் பகுதியில் ஏற்பட்டது இயற்கையான நில நடுக்கம்

வடகொரியா தனது அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் பகுதியில் ஏற்பட்டது இயற்கையான நில நடுக்கம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா தனது அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் பகுதியில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தென்கொரியா இது இயற்கையான நில நடுக்கம் எனவும்  ஆயுத பரிசோதனைகளால் ஏற்படவில்லை  என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் நில நடுக்கம் ஏற்பட்டதை  உறுதிசெய்துள்ளது. வடகொரியா தனது ஆறு அணுவாயுத பரிசோதனைகளையும் மேற்கொண்டிருந்த பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வடகொரியா வழமையாக அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும சந்தர்ப்பங்களில் நில நடுக்கம் ஏற்படுவது வழமை எனினும் இம்முறை இயற்கையாகவே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More