159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையில் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சபரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 முதல் 150 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை சில நாட்களுக்கு தொடரக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையை அண்டிய கடற்பரப்பில் கடுமையான காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love