179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மற்றும் இந்திய படையினர் இந்தியாவின் புனேவில் விசேட கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பதினான்கு நாட்கள் இந்தப் கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் ஓர் கட்டமாக இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மித்ரா சக்தி இராணுவ கூட்டுப் பயிற்சி புனேவின் அவுன்ட் முகாமில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளினதும் படையினருக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இந்த கூட்டு இராணுவப் பயிற்சி வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love