கலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக தொடர்ந்து கொழுந்து விட்டெரியும் காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காட்டுத் தீயானது கிராமப்புற பகுதிகளை நோக்கி பரவியதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 16 இடங்களில் எரிந்துக் கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடு;பட்டுள்ளனர் எனவும் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால், இன்னும் பல பேரை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றும் நிஜலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இந்த காட்டுத் தீ குறித்து கருத்து தெரிவித்த கலிஃபோர்னியா மாகாண ஆளுநர், இந்த மாகாணம் இதுவரை சந்தித்திராத மோசமான பேரழிவு என்று வர்ணித்துள்ளார்.