157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தெஹ்மினா ஜானுவா ( Tehmina Janjua ) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தற்பொழுது ஓமானுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமான் பயணத்தினை முடித்துக் கொண்டு அவர் இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்வார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த பயணத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love