Home இலங்கைமட்டக்களப்பு புதிய காத்தான்குடியில் இரு குழுக்களிடையில் மோதல் ஏழு பேர் காயம்:-

மட்டக்களப்பு புதிய காத்தான்குடியில் இரு குழுக்களிடையில் மோதல் ஏழு பேர் காயம்:-

by editortamil

மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவின் புதிய காத்தான்குடிப்பகுதியில் இரு குழுக்களிடையில் நேற்றையதினம் ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் இச்சம்பவம் தொடர்பில,; விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இடம்பெற்ற திருமண வைபவமொன்றின் மணமகனொருவர், மணமகளிடம் சீதனம் பெற்றதாக தெரிவித்து அவரை விமர்சித்து போலியான முகநூல் பக்கமொன்றில் எழுதப்பட்டதாலேயே, இந்த குழு மோதல் ஏற்பட்டுள்ளதென, காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More