Home இலங்கைநாமல் ராஜபக்ஸ சிறையில் இருப்பதற்கான பயிற்சிகளை தற்போது எடுத்து வருகின்றார்

நாமல் ராஜபக்ஸ சிறையில் இருப்பதற்கான பயிற்சிகளை தற்போது எடுத்து வருகின்றார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவினால் அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டமானது ஓர் அரசியல் கட நாடாகமாகும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே நீதிமன்றின் உத்தரவினை மீறி நாமல் ராஜபக்ஸ இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பெத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்மை ஓர் அரசியல் கைதியாக அடையாளம் காட்டிக் கொண்டு மக்கள் மத்தியில் அனுதாபம் திரட்டும் நோக்கில் நாமல் ராஜபக் இவ்வாறான கபட நாடகம் ஆடி வருவதாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றின் உத்தரவினை மீறி இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் நாமல் ராஜபக்ஸவிற்கு கிடையாது எனவும், தம்மை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்தப் போராட்டத்தை அவர் நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறையில் இருப்பதற்கான பயிற்சிகளை நாமல் ராஜபக்ஸ தற்போது எடுத்து வருகின்றார் எனவும், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More