இலங்கை பிரதான செய்திகள்

மாத்தளையில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மாத்தளை, உக்குவலை பகுதியைச்; சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் இவர் காணாமல் போயுள்ளாரென உறவினர்கள்  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  38வயதான மஹேஷ் வில்பத் ஏக்கநாயக்க  என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி  இரவு தனது  வீட்டிலிருந்து கட்டுகஸ்தோட்டைக்கு,   காரில்  சென்ற  அவர்    இதுவரை வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  அவர் பயணித்த காரை, கட்டுகஸ்தோட்டை பழைய பாலத்திலிருந்து மீட்டுள்ளதாகவும் காணாமல் போனவர் பயன்படுத்திய கைத்தொலைபேசி  உள்ளிட்டவற்றினை  காரிலிருந்து மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.