குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அன்ட்ரய்ட் செல்லிடப்பேசிகள் மீது வைரஸ் தாக்கம் இடம்பெறக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கணனி அவசர தயார் பிரிவு இந்தக் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தவிடயம் குறித்து அன்ட்ரய்ட் செல்லிடப் பேசி பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
ரன்சம்வெயார் என்னும் இந்த வைரஸ் தாக்கம் பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்லிடப்பேசிக்குள் புகுந்து தகவல்களை களவாடி, அந்த தகவல்களை திரும்ப வழங்குவதற்கு கப்பத் தொகை கோரும் வகையில் இந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஸ்யா, உக்ரேய்ன், தாய்வான் உள்ளிட்ட 99 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இனந்தெரியாத கோப்புக்களை தரவிறக்கம் செய்தல் அல்லது கிளிக் செய்தல் மூலம் இந்த வைரஸ் செல்லிடப்பேசிகள் மற்றும் கணனிகளுக்கு பரவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கணனி வைரஸ் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.