விளையாட்டு

பத்தாவது தொடர் தோல்வியை சந்தித்த இலங்கை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பத்தாவது தடவையாகவும் இலங்கை அணி தொடர்ச்சியாக சர்வதேச ஒருநாள் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை ஏழு விக்கட்டுகளினால் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதில் இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஹசன் அலி ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. போட்டியில் அறிமுகமாகிய இனமுல் ஹக் 100 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஐந்து போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. மூன்று பூஜ்ஜியம் என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.