183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா தனது அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று வேண்டுகோள் விடுக்கவுள்ளனர். வடகொரியாவிற்கு எதிராக புதிய தடைகளை விதிப்பது என ஐரோப்பிய ஓன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் இணங்கியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று கலந்துரையாடலிற்கு பின்னர் இந்த வேண்டுகோளை விடுக்கவுள்ளனர்.
வடகொரியாவை தனது ஆயுததிட்டங்களை முழுமையாக ஆராயத்தக்க விதத்தில் கைவிடுமாறு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கோரவுள்ளனர். மேலும் வடகொரியாவிற்கு எதிரான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயார் எனவும் அவர்கள் அறிவிக்கவுள்ளனர்.
Spread the love