220
யாழ்.காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பல்கலைகழக மாணவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் மாணவர்களால் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 10 மணியளவில் நினைவஞ்சலி நிகழ்வுகள் மாணவர்களின் ஏற்பாடில் நடைபெற்றது.
யாழ். பல்கலை கழக மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை யாழ்.காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவரும் படுகொலை செய்யபப்ட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.காவல் நிலையத்தை சேர்ந்த ஐந்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
Spread the love