Home இலங்கைகிளிநொச்சியில் பெறுமதி மிக்க முதிரை மர குற்றிகள் மீட்பு

கிளிநொச்சியில் பெறுமதி மிக்க முதிரை மர குற்றிகள் மீட்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி காவல்துறையினருக்கு  கிடைத்த தகவலிற்கமைய மேற்கொண்ட சோதனையின்போது  பெறுமதி மிக்க முதிரை மர குற்றிகள்     மீட்கப்பட்டுள்ளன.  விசுவமடு பகுதியிலிருந்து தர்மபுரம் நோக்கி எடுத்த வரப்பட்ட குறித்த பெறுமதி மிக்க மரக்குற்றிகளே  இவ்வாறு   மீட்கப்பட்டுள்ளன.

வாகனமொன்றில் ஏற்றிவரப்பட்ட குறித்த மரக்குற்றிகள் நேற்று(20) இரவு 9.30 மணியளவில் தர்மபுரம் நெத்தலியாறு பகுதியில் வைத்து கைப்பெற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறைமா அதிபரின் விசேட மது ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டதுடன், வாகனமும் மீட்கப்பட்டது. இதன்போது இருவர்   கைது செய்யப்பட்டதுடன், இன்று(21) அவர்கள்  நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என்பது  குறிப்பிடதக்கதாகும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More