420
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட்டை சூதாட்டக்காரர்கள் அணுகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அணிக்கு எதிராக தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்றாவது ஒருநாள் போட்டியின் பின்னர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு சப்ராஸிடம் கோரப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சப்ராஸ் அணி நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சர்வதே கிரிக்கட் பேரவை இந்த விடயம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Spread the love