Home இலங்கைமுன்னாள் பிரதி அமைச்சர் வாகன விபத்தில் காயம்

முன்னாள் பிரதி அமைச்சர் வாகன விபத்தில் காயம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன வாகன விபத்து ஒன்றில் காயமடைந்துள்ளார். கொஸ்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் அவர் காயமடைந்துள்ளார். முன்னாள் பிரதி அமைச்சர் பயணம் செய்த வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான முன்னாள் பிரதி அமைச்சர் அவிசாவல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கீதாஞ்சன குணவர்தனவின் வாகனத்தில் மோதுண்ட மற்றைய வாகனத்திலிருந்து நான்கு கிலோ கிராம் எடையுடைய கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More