குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போசர்களில் ஒருவராகவும் கட்சியின் உறுப்பினராகவும் மஹிந்த ராஜபக்ஸ கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் தொடர்பிலான கட்சியின் கூட்டங்களில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் சுதந்திரக் கட்சியின் சில தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு வேறும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.