இலங்கை

இலங்கையில் பேருந்துகளில் டீசலுக்கு பதில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது?


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்iகியல்  பேருந்துகளில் டீசலுக்கு பதிலீடாக மண்ணெண்ணை பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில்  இவ்வாறு மண்ணெண்ணை பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. செலவை கட்டுப்படுத்தும் நோக்கில் டீசலுடன் சில பேருந்து சாரதிகள் மண்ணெண்ணை கலந்து பேருந்துகளை செலுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு டீசலுக்கு பதிலீடாக மண்ணெண்ணை பயன்படுத்தப்பட்டு வருவதாக தனியார் பேருந்து  உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்னவும் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுவதுடன், பேருந்துகளை பராமரிப்பதிலும் சிரமங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.  நிவாரண விலை அடிப்படையில் மண்ணெண்ணை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply