Home இலங்கைநயப்புடைத்தவர்களுக்கு விளக்கமறியல்

நயப்புடைத்தவர்களுக்கு விளக்கமறியல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பணமோசடியில் ஈடுபட்டவரை நயப்புடைத்தவர்களை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.  தென்னிலங்கையை சேர்ந்த குழு ஒன்று யாழில் உள்ளவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருமளவான பணத்தினை மோசடி செய்து ஏமாற்றி இருந்தது.

அந்நிலையில் குறித்த குழுவை சேர்ந்த ஒருவர் வியாழக்கிழமை இரவு மண்கும்பான் வெள்ளை கடற்கரை பகுதியில் தங்கி உள்ளதாக அறிந்த நாவாந்துறை மக்கள் அப்பகுதிக்கு சென்று குறித்த நபரை மடக்கி பிடித்துள்ளனர்.   பின்னர் குறித்த நபரை நாவாந்துறை பகுதிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து நயப்புடைத்த பின்னர் யாழ்.காவல்துறையினரிடம்  குறித்த நபரை கையளித்தனர்.

அந்நிலையில் , மக்களால் நயபுடைக்கப்பட்ட நபர் தன் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என ஆறு பேர் மீது யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர்  குறித்த ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து ஆறு சந்தேக நபர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More