153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தோனேசியாவில் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தோனேசியாவில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கண்மூடித்தனமான தண்டனை நிறுத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் மட்டும் இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. சஹரிய சட்டத்தின் அடிப்படையில் கள்ளத் தொடர்பு மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love