பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ஆசிய நாடுகளில் ஒருவார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையிலி நேற்றையதினம் அவர் இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகள் இடையேயும் உறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக பாகிஸ்தான் நடந்து கொள்வது குறித்து இரு தரப்பிலும் மிகுந்த கவலைதெரிவிக்கப்பட்டது.
மேலும் பயங்கரவாதிகளுக்கு, ஆதரவு, புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் கைவிடவேண்டும் எனவும் தனது மண்ணில் இருந்தவாறு பக்கத்து நாடுகளில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போதுதான் இப்பிராந்தியத்தில் குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பும், அமைதியான சூழலும் நிலவுவதை உறுதி செய்ய முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்த்தான்,