Home இலங்கைநண்பனை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

நண்பனை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

by admin

 

தனது நண்பனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த  வழக்கின் பிரதிவாதியை குற்றவாளி எனக் கண்டறிந்துபொலன்னறுவை மாகாண மேல்  நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். பொலன்னறுவை, கவுடுல்ல பகுதியைச் சேர்ந்த காமினி ரணவீர என்ற நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி  , பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தனது தீா்ப்பின் போது தொிவித்துள்ளாா்.

2015 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம்  திகதி  அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் , பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் கவுடுல்ல பிரதேசத்தில், பி.ஜி. ரன்பண்டா என்பவரை மண்வெட்டியால்  தாக்கி கொன்ற குற்றச்சாட்டில், இலங்கை தண்டனை கோவைச் சட்டத்தின் பிரிவு 296 இன் கீழ், பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

பிரதிவாதியான காமினி ரணவீர, இறந்தவரின் மனைவியுடனான  தகாத உறவின் விளைவாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More