Home உலகம்கடத்தப்பட்ட  புகையிரதத்திலிருந்து 300 ற்கும் மேற்பட்ட  பயணிகள் மீட்பு

கடத்தப்பட்ட  புகையிரதத்திலிருந்து 300 ற்கும் மேற்பட்ட  பயணிகள் மீட்பு

by admin

 

பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில்  ஆயுதக்குழு ஒன்றினால் பயணிகளுடன்  கடத்தப்பட்ட  புகையிரதத்திலிருந்து 300-இற்கும் மேற்பட்ட  பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது 33 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு  இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம்(11) பயணிகள்   புகையிரதம் ஒன்று  440 பயணிகளுடன் ஆயுதக்குழு  ஒன்றின்  கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு  அவா்கள்  பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More