தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறை தீர்க்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் தூக்குக் கயிற்றுடன் வந்தமையால் கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டுள்ளது. தமக்கான பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகையை வழங்காமையைக் கண்டித்தே விவசாயிகள் இவ்வாறு மண்ணெண்ணை கான், நஞ்சு மருந்துக் குப்பிகள் மற்றும் தூக்குக் கயிற்றுடன் வந்தனர்.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதிக்குள் பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவி்லலை என்றால் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் நாகை விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, தஞ்சை மாவட்டத்தில் பயிர்காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து பாதிக்கபட்ட விவசாயிகள் குறை தீர்க்கூட்டத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.