180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஓய்வு பெற்றுக்கொண்ட இராணுவ அதிகாரியொருவர் படையினரை விமர்சனம் செய்வது தவறானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவப் படையில் சேவையாற்றிய உயர் படையதிகாரி அல்லது கடைநிலைச் சிப்பாய் ஒருவர் இராணுணவத்தினரை ஓய்வின் பின்னர் விமர்சனம் செய்வது பாரதூரமான குற்றமாகவே தாம் நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு விமர்சனம் செய்யாம் தாம் கடமையாற்றிய காலத்தில் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். வெலிகந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love