சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, இயற்கை வளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக கேரள மாநிலம் கடவுளின் தேசம் என அழைக்கப்படுகின்றது.
அதேவேளை உலகிலேயே கோயில் திருவிழாவுக்காக, சர்வதேச விமான நிலையத்தையே மூடும் பிரதேசமாகவும் கேரளாதான் விளங்குகின்றது.
இந்தநிலையில் கேரளாவின் தவிர்க்க முடியாத ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக திருவனந்தபுரத்தில் உள்ள உள்ள பத்மநாப சுவாமி கோயில் கருதப்படுகின்றது. இதன் பாதாள அறைகளில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் மூலம் உலகின் பார்வையையே தன் பக்கம் திருப்பிய ஆலயமும் இதுதான்.
இந்தநிலையில் இந் கோவிலின் ஆராட்டு ஊர்வலத்தை முன்னிட்டு அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமான நிலையம் இன்று 5 மணி நேரம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் உள் பகுதிகள், பல்வேறு வெளிநாடுகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு சுற்றுலா வருபவர்கள், திருவனந்தபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், பக்கத்தில் உள்ள தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தோர் என ஆயிரக்கணக்காணோர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.