குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரணை நடத்தாது என தெரிவிக்கப்படுகிறது. பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமரிடம் விசாரணை நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாறாக பிரதமர் சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் தனது விளக்கத்தை ஆணைக்குழுவிடம் முன்வைப்பது போதுமானதாக அமையும் என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பமாகும் போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். துரித கதியில் இந்த விசாரணைகளை பூர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணைக்குழு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்