இந்தியாவின் குஜராத் மாநிலம் அஹமதாபாத் அரச மருத்துவமனையில கடந்த 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. குஜராத் மாநில அரசினால் நடத்தப்படும் மிக்பெரிய மருத்துவமனையில் நடைபெற்ற இந்த குழந்தைகள் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு விசாரணை ஆணையம் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மகப்பேறு மருத்துவர், குழந்தையியல் நிபுணர் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுடன் ஏனைய பகுதிகளில் மருத்துவ வசதி கிடைக்காத குழந்தைகளும் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவை பெரும்பாலும் 1.5 கிலோ மட்டுமே எடை கொண்டவையாக இருந்துள்ளனர் எனவும் இவர்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை இருந்துள்ளது எனவும் மருத்துவமனைத் தரப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.