Home இலங்கைகொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிறுவன் உட்பட 4 பேர் பலி

கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிறுவன் உட்பட 4 பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 வயது சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை நான்கு துப்பாக்கிதாரிகளினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் யோதபிட்டிய மற்றும் குறுந்துகஸ்பியஸ ஆகிய இடங்களில் அதிகாலை வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More